உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்று வருகிறது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் கண்டன ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சென்னையில் இந்து அமைப்பினர் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து காவல் துறையினர் இந்து அமைப்பினரை அழைத்து பொது வெளியில் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை மீறி அசாம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சென்னையில் முக்கியமான வழிபாட்டு தலங்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சுமார் 18 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அயோத்தி கோயிலை மணல் சிற்பமாக வடித்த சுதர்சன் பட்நாயக்!