ETV Bharat / state

சரவணா ஸ்டோர்ஸில் 26 நபர்களுக்கு கரோனா! - சென்னை சரவணா ஸ்டோர்ஸில் 26 நபர்களுக்கு கரோனா

சென்னை புரசைவாக்கத்தில் இயங்கிவரும் சரவணா ஸ்டோர்ஸில் 26 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

chennai saravana stores
தனியார் நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸில் 26 நபர்களுக்கு கரோனா!
author img

By

Published : Apr 19, 2021, 4:17 PM IST

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சென்னையில், அண்ணாநகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து முகக்கவசம் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுவருகின்றன.

கரோனா
தடைசெய்யப்பட்ட பகுதி

இந்நிலையில் சென்னையில் அதிக கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 26 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கடைக்கு அருகில் வீடு எடுத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு சிலருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அங்கிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் 26 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு இயங்கும் கடையும் மூடப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிப்பது போன்ற அனைத்துத் தடுப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.