தருமபுரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் நாளை கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பாமக சார்பில் 8 வழிச்சாலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேவியட் மனு என்றால் என்ன?
நீதிமன்றத்தில் வாதி வழக்கு தாக்கல் செய்யும்போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் அவர், தன்னை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பை வழங்கக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர்.
கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத்தான் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், வாதியின் உரிமை காக்கப்படுகிறது. கேவியட் மனு முன்னெச்சரிக்கை மனு என்றும் அழைக்கப்படுகிறது.