ETV Bharat / state

உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி கைது!

ரவுடி கைது
ரவுடி கைது
author img

By

Published : Jun 2, 2021, 4:21 PM IST

Updated : Jun 2, 2021, 7:15 PM IST

16:18 June 02

ரவுடியைப் பிடிக்கச் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் படுகாயமடைந்தார்.

சென்னையின் புறநகர் பகுதியில் ரவுடி சி.டி மணி பதுங்கியிருந்தத் தகவல் அறிந்து, நேற்றிரவு (ஜூன்.1) தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிடி மணியைப் பிடிக்கச்சென்ற போது, ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

காவல்துறையினர் நடத்திய எதிர் தாக்குதலில் சி.டி மணியும் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட ரவுடி சி.டி. மணியை கைது செய்த காவல்துறையினர், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது, காயமடைந்த உதவி ஆய்வாளர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி மணி மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அடங்க மறுக்கும் மதுப்பிரியர்கள்: சேலம் முழுவதும் 268 நபர்கள் கைது

Last Updated : Jun 2, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.