நாளை முதல் சென்னை தளர்வுகளுடன் இயங்கவுள்ளது. அதனால் நாம் பாதுகாப்பாக இருக்க சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு...
- முகக்கவசம் இல்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.
- மூக்கையும் வாயையும் முழுமையாக மூடிய முகக்கவசத்தை அணிய வேண்டும்.
- நீங்கள் செல்லும் கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களை, முகக்கவசம் அணியச் சொல்லுங்கள். மறுத்தால் அந்தக் கடையிலிருந்து உடனே சென்றுவிடுங்கள். முகக்கவசம் அணியாத கடைக்காரர்களிடம் பொருள்கள் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள்.
- பில்லிங் செய்யும் இடங்களில் கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் தனிநபர் இடைவெளி விட்டு நில்லுங்கள்.
- பிறருடன் கை குலுக்குவதை தவிருங்கள்.
- யாராக இருந்தாலும் முகக்கவசம் அணிய சொல்வதற்கோ, தனிநபர் இடைவெளியை பின்பற்ற சொல்வதற்கோ தயங்காதீர்கள்.
- எப்போதும் சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துங்கள்.
- தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.
- வீடு திரும்பியதும் துணிகளை அகற்றி தலை உட்பட முழுமையாக குளியுங்கள்.
- கழற்றிய துணிகளை மறுநாள் காலை வரை தொடாதீர்கள்.
- வீட்டில் முதியோர்கள் இருந்தால், வெளியே சென்று திரும்புபவர்கள் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதை தவிர்த்துவிடுங்கள்.
- நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை யாரும் கிண்டல் செய்தால் அதை பொருட்படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளது.