சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வடகிழக்கு காற்றலையின் காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 4, 5 வானிலை நிலவரம்
தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜனவரி 6,7 வானிலை நிலவரம்
தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இன்று (ஜனவரி 3) முதல் 5 வரை
மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 10, பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) தலா 5, மணிமுத்தாறு (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), நாங்குநேரி (திருநெல்வேலி) தலா 2, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும், நாளையும் (ஜனவரி 3, 4)
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா முக்கியக் குற்றவாளியாக சேர்ப்பு!