சென்னை: செங்குன்றம் ஜிஎன்டி ரோடு, நேதாஜி தெருவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று (ஜூலை.12) அதிகாலை திடீரென அங்கு வந்த ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நிதி நிறுவனத்தின் காவலாளி சிவானந்தனின் கை, கால்களை கட்டிப்போட்டு ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு துளையிட்டு கொள்ளையடிக்க முயன்றனர்.
சிறிறு நேரம் முயற்சித்த பின்னர், மாட்டிக் கொள்வோம் என்று சுதாரித்துக் கொண்ட அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் அருகில் உள்ள கட்டடத்தின் காவலாளிக்கு செல்போன் மூலம் காவலாளி தகவல் தெரிவித்து உதவி கோரினார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் காவல் துறையினர், அங்கு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவடியில் ராணுவ வீரர் தற்கொலை