தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் நாளை (ஆகஸ்ட் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி திருவான்மியூர் பகுதிகளான, கண்ணப்ப நகர், ஏ.ஜி.எஸ் காலனி, நடேசன் காலனி, ஸ்ரீராம் அவென்யூ 1ஆவது முதல் 4ஆவது குறுக்கு தெரு, நெட்கோ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1ஆவது மற்றும் 2ஆவது இணைப்பு தெரு, சுப்ரமணி சாலை, ஈ.சி.ஆர். உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரியில் தொடர் கனமழை: மின் விநியோகத்தில் தடை!