சென்னை துறைமுகம் இதற்கு முன்னர் இந்தாண்டு ஜூனில் 39,43,100 டன் சரக்குகளைக் கையாண்டிருந்தது. இந்நிலையில், அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளைக் கையாண்டு அதன் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
மேலும், 2021 அக்டோபர் மாதத்தில் 1,53,948 டிஇயூ கொள்கலன்களைக் கையாண்டு முக்கிய சாதனையைச் சென்னை துறைமுகம் எட்டியுள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் 1,51,754 டிஇயூ கொள்கலன்களைக் கையாண்டது முந்தைய சாதனையாக இருந்தது.
2020 டிசம்பரில் கையாளப்பட்ட 93,484 டிஇயூ கொள்கலன்களை விட அதிகமாக 2001 அக்டோபரில் 94,330 டிஇயூ கொள்கலன்களைக் கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் சாதனை படைத்துள்ளது.
முனையச் செயல்பாட்டாளர்களான சென்னை கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் மற்றும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட், இதர பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அலுவலர்களை மேற்கண்ட சாதனைக்காகச் சென்னை துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் சுனில் பாலிவால் ஐஏஎஸ் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் - தனி கமிட்டி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு