சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அகரமேல் கிராமம் பகுதியில் வசித்து வருபவர் முரளி. இவருடைய வீட்டின் மேல் மாடியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இந்த செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு அனைத்து விதமான உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ள இப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பது குழந்தைகளுக்கு நோயை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.