ETV Bharat / state

பிராங்க் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை - பிராங்க் வீடியோ எடுத்தால் நடவடிக்கை

பிராங்க் வீடியோவால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

ரோகித் குமார்
ரோகித் குமார்
author img

By

Published : Nov 23, 2022, 8:06 AM IST

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இரண்டு யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிட மாட்டோம் என போலீசாருக்கு அவர்கள் எழுதியும் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற யூடியூப் சேனல்களையும் இதேபோன்று விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளதாக புகார் தாரரான ரோகித் தெரிவித்துள்ளார்.

ரோகித் குமார்

ஆபாசம், சாதி, மத, இன ரீதியாக பிராங்க் வீடியோ வெளியிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூப் சேனல்களுக்கு சென்னை காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

யூடியூப் சேனல்கள் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலம் விதிகளை மீறாமல் வீடியோ எடுத்து வெளியிடலாம் என தெரிவித்துள்ளது. பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்படும் பொதுமக்களிடமும் உரிய விளக்கத்தை கொடுத்து வீடியோ எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வீடியோவில் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பிராங்க் வீடியோவால் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: "சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி" - அதிர்ச்சித்தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.