சென்னைக்கு லாரி மூலம் கஞ்சா கடத்துவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், காரனோடை சோதனைச்சாவடி அருகே சோனை பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திராவிலிருந்து வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரியிலிருந்த அட்டைப் பெட்டிகளில் உள்ள 12 நெகிழி பைகளில் 308 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணை செய்ததில் கஞ்சாவை விசாகப்பட்டினத்திலிருந்து ஆந்திரா வழியாக மதுரைக்கு கடத்த முயன்றதும் மேலும் மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி, ஆண்டி என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது, மூவர் தப்பி ஓட்டம்