ETV Bharat / state

சீட்டு பணம் மோசடி - காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூதாட்டி நூதன போராட்டம்

author img

By

Published : Mar 10, 2020, 8:22 PM IST

Updated : Mar 10, 2020, 11:50 PM IST

சென்னை: சீட்டு பணம் மோசடி செய்தவர்களை கைது செய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூதாட்டி தன் கால்களில் சங்கலியை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

மூதாட்டி நூதன போராட்டம்
மூதாட்டி நூதன போராட்டம்

சென்னை பெரம்பூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி தில்லி ராணி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரிடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் தில்லி ராணியின் பணம் 75 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் அந்த நபர் பணத்தை திரும்ப தர மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி, முதலமைச்சர் அலுவலகத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மூதாட்டி கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மூதாட்டி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தன் கால்களில் சங்கலியை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதைப் பார்த்த காவல் துறையினர் அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து மூதாட்டி அங்கிருந்து சென்றார்.

மூதாட்டி நூதன போராட்டம்

இதையும் படிங்க: போலியோவால் பாதிக்கப்பட்ட பேரன்: இலவச வீட்டுமனைக்கு போராடும் மூதாட்டி

Last Updated : Mar 10, 2020, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.