ETV Bharat / state

’பப்ஜி மதனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ - சங்கர் ஜிவால் - சங்கர் ஜிவால்

சென்னை: யூ டியூபர் மதனின் இல்லத்தில் இருந்து கணினி, வலைதளங்கள் தொடர்பான பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்
author img

By

Published : Jun 17, 2021, 6:42 PM IST

சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பட்ட அசாம் இளைஞரை, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”யூ டியூபர் மதனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இல்லத்தில் இருந்து கணினி, இணையதளப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதனை தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம். இணைய தளத்தில் நடைபெறும் இதுபோன்ற குற்றங்களில், ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களுக்கு தனித்தனி விதிகளை அரசு பிறப்பித்துள்ள்ளது. சமூக வலைதளக் குற்றங்களுக்கு உள்ளீடு, கண்காணிப்பு, நடவடிக்கை என மூன்று நிலைகளில் விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, வலுவான வாதத்தை நீதிபதிகள் முன்பு வைத்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி உள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Battlegrounds Mobile India: முகத்தில் மரு வைத்து வரும் பப்ஜி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.