ETV Bharat / state

மது கொடுக்காத கடை மீது பெட்ரோல் குண்டு.. நள்ளிரவில் போதை ஆசாமி அட்டகாசம்! - chennai private liquor shop

சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூடிய கடையில் மதுபானம் கேட்டு தொல்லை செய்த நபர் மதுபானம் கொடுக்காத ஆத்திரத்தில் கைது மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 9, 2023, 10:08 AM IST

சென்னை: வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஜெய் கார்டன் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடை மூடிய பிறகு நள்ளிரவு 12 மணி அளவில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். அவர் 100 ரூபாய் கொடுத்து மதுபானம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர் ராஜேந்திரன், கடை மூடிவிட்டதாக கூறி மதுபானம் கொடுக்க மறுத்ததால், அவரிடம் போதை ஆசாமி தகராறில் ஈடுபட்டு சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் மதுகடைக்கு வந்த அந்த போதை ஆசாமி, திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை பற்றவைத்து மதுக்கடை மீது வீசிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை கண்ட கடை ஊழியர்கள் பெட்ரோல் பாம் போட்ட அந்த நபரை பிடித்து வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பிடிப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னபோரூர் பகுதியை சேர்ந்த கதிரவன்(32) என்பதும் போரூரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போதைக்கு அடிமையான கதிரவன் ஏற்கனவே மதுபானம் வாங்கி குடித்துவிட்டு, பின்னர் மீண்டும் மதுபானம் வாங்க வந்த போது கடை மூடிய ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து குவார்ட்டர் பாட்டிலில் நிரப்பி பற்றவைத்து மதுபான கடை மீது வீசியதும் தெரியவந்தது.

அதோடு, ஏற்கனவே கதிரவன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போதை ஆசாமி கதிரவனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என லீனா மணிமேகலை கூறியது பொய்" - காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.