ETV Bharat / state

சென்னையில் விபச்சாரம்.. 8 இளம்பெண்கள் மீட்பு; 4 பேர் கைது! - Tamil Nadu Prostitution

சென்னை தியாகராய நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்து வந்த நான்கு பேரை கைது செய்த போலீசார் 8 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 10:18 AM IST

சென்னை: வெளியூர்களில் இருந்து வேலைத்தேடி சென்னை நகருக்கு வரும் சில அப்பாவி இளம்பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் சில கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

லோகாண்டோ மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி சட்ட விரோதமாக பாலியல் தொழிலை சில கும்பல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தி வரும் போலீசார் அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பாண்டிபஜார் காவல் நிலைய போலீசார் தியாகராய நகர் சதாசிவம் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சஜின் ( வயது 23), கேரளா மாநிலத்தை சேர்ந்த அனுப்குமார் ( வயது 25) ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரூ.8,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அதேபோல் கோடம்பாக்கம் காவல் நிலைய போலீசார் கோடம்பாக்கம், வரதராஜன்பேட்டை பிரதான சாலையில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்து, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சந்தீப்(24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட 7 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோன்று தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த ஆனந்த் ஸ்ரீ வத்சவா ( வயது 29) என்ற தரகரை கைது செய்து ஒரு பெண்ணை மீட்டு உள்ளனர்.

தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் நான்கு பாலியல் தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.