ETV Bharat / state

காதலிக்காக பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பு.. கம்பி எண்ணும் ரெயின் கோட் ரோமியோ! - 16 year old snatch gold chain

காதலியை மகிழ்விக்க 16 வயது சிறுவனுடன் இணைந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ரெயின் கோட் கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலிக்காக கவுன்சிலரிடம் நகை பறிப்பு; சிக்கிய ரெயின்கோட் கொள்ளையன்

author img

By

Published : Dec 14, 2022, 8:14 AM IST

Updated : Dec 14, 2022, 10:05 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சி 59 ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலரான சரஸ்வதி கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகம் வழியாக சர்ச்சுக்கு தனது கணவரோடு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் ரெயின் கோட் அணிந்து கொண்டு முகம் தெரியாதவாறு வேகமாக வந்து பெண் கவுன்சிலர் சரஸ்வதியின் கழுத்தில் உள்ள செயினை பறிக்க முயன்றுள்ளனர்.

செயின் பறிக்கும் பொழுது கொள்ளையர்களிடம் போராடி கழுத்தில் உள்ள அனைத்து செயின்களையும் பறிக்க முடியாத படி சரஸ்வதி தடுத்துள்ளார். இருப்பினும் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 3 1/2 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்ததில் செயின் பறித்த கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் மண்ணடியில் திருடு போன வாகனம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் செயின் பறிப்பு கொள்ளையர்கள் செல்லும் இடங்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு அடுத்தடுத்து போலீசார் கண்டுபிடித்தனர்.

ரெயின் கோட்டுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றும் இரண்டு செயின் பறிப்பு கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், அவர்கள் தண்டையார் பேட்டையை சேர்ந்த அப்துல் ஜாபர்(18) மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

செயின் பறித்த சந்தோஷத்தில் கையை விரித்து ஆகாசத்தில் பறப்பது போல் சாகசம் செய்து கொண்டே இரு சக்கர வாகனத்தில் 120 கி.மீ வேகத்தில் தப்பி செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இதே போன்று கடந்த 5 நாட்களில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பெண்களிடம் பறித்த நகைகளை காதலிக்கு அணிவித்து போட்டோ எடுத்து அழகு பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். காதலியை சந்தோஷப்படுத்தி உல்லாசமாக இருக்க செயின்பறிப்பில் ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மழைக்காலம் என்பதால் ரெயின் கோர்ட்டை அணிந்து கொண்டு முகத்தை மறைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு ரெயின் கோட்டில் செல்லும் போது வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு சந்தேகம் வராது என்ற அடிப்படையில் ரெயின் கோர்ட் கொள்ளையர்களாக வலம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் அப்துல் ஜாபருக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.

மீதமுள்ள செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து பிடிபட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஜாபரை நீதிமன்ற காவலில் சிறையிலும், 16வயது சிறுவனை கெல்லிஸில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்துள்ளனர். சம்பவம் நடந்த 30 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்ததோடு நகையும் மீட்ட போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 16 வயது சிறுவன் சுவர் மீது ஏறி தப்பி சென்றுள்ளான். இதனால் தப்பியோடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற மகன்: தேனியில் நடந்தது என்ன?

Last Updated : Dec 14, 2022, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.