ETV Bharat / state

முதுகலை பாடப்பிரிவுகளுக்கான TANCET தேர்வு- 8ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் - pg course application

சென்னை: எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் ஆகிய பாடப்பிரிவில் சேர்வதற்கான டான்செட் தேர்விற்கு 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வு செயலர் ஈஸ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

டான்செட் தேர்வு
author img

By

Published : May 5, 2019, 6:55 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019க்கான டான்செட் தேர்வை சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் நடத்தும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 8ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறியுள்ளார்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான்  
டான்செட் 8 ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் 

சென்னை, 

 தமிழ்நாடு பொது  நுழைவுத் தேர்வு செயலாளர் ஈஸ்வரக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2019)  சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் நடத்தும்  என அரசு அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2019-20ம் கல்வியாண்டில் சேரலாம். மேலும் சில பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றனர். 

எம்.பி.ஏ, எம்.சிஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர்500 ரூபாயும், எஸ்.சி,எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்250 ரூபாயும் ஆன்லைன் மூலம்  செலுத்த வேண்டும்.
இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 8  ந் தேதி முதல் 25 ந் தேதி வரை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.
 எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு ஜூன் 23 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும். 

 மாணவர்கள் சேர்வதற்கான தகுதி, பதிவு செய்தல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை  www.annauniv.edu/tancet2019  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.