ETV Bharat / state

வீடு முழுவதும் செடிகள் அமைத்த 'பசுமைக் காதலன்' - pasumai veedu

சென்னை: பசுமை மீது கொண்ட காதலால் ஜஸ்வந்த் சிங் என்பவர் தனது வீட்டில் 350க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து தன் வீட்டையே ஒரு பசுமைக் குடிலாக மாற்றி 35 வருடங்களாக பராமரித்து வருகிறார்.

chennai-organic-home
author img

By

Published : Oct 25, 2019, 11:10 AM IST

Updated : Oct 25, 2019, 3:08 PM IST

சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் தனது வீட்டில் 350க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து 35 வருடங்களாக பராமரித்து வருகிறார். இதில் 10க்கும் அதிகமான அரியவகை செடிகளையும் வளர்த்து வருகிறார். செம்மரம், கற்பூரம், திருஓடு, இனிப்பு துளசி போன்ற அரிய வகை செடிகளையும் பராமரித்து வளர்த்து வரும் இவர், இங்குள்ள ஒவ்வொரு செடிகளும் ஒரு மருத்துவ குணம் கொண்டவை என தெரிவிக்கிறார்.

மருத்துவ குணம் கொண்ட செடிகள் தவிர காய்கறி, பழவகை செடிகளையும் தனது மாடித் தோட்டத்தில் பராமரித்து வருகிறார். மேலும் இயற்கை எரிவாயு தயாரிப்பு, சூரிய மின்சக்தி, மர வீடு என தன் வீடு முழுவதும் இயற்கை வழியில் நிறுவி அதன் மூலம் பயனடைந்து வருகிறார். இதில் இன்னும் வியப்பான விஷயம் என்னவென்றால் தன் தோட்டத்திலிருந்து வரும் எந்தக் கழிவுகளையும் இவர் வெளியில் போடுவதில்லை. அனைத்து கழிவுகளையும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக மாற்றிப் பயன்படுத்திவருகிறார். ஜஸ்வந்தின் இந்தச் செயலுக்காக சென்னை மாநகராட்சி இவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

பசுமை சூழ்ந்து காணப்படும் ஜஸ்வந்த் சிங்கின் வீடு

இதைப் பற்றி பசுமை இல்லத்தைப் பராமரித்து வரும் ஜஸ்வந்த் சிங் தெரிவிக்கையில், "மரம், செடிகள் இல்லாமல் நாம் இல்லை. இதை நாம் சரியாக பராமரிக்கவில்லை என்றால் நமக்குப் பின்னர் வரும் சந்ததியினரை நாம் ஏமாற்றுவதற்குச் சமம்" எனக் கூறினார். மேலும் "மரம், செடிகள் அனைத்தும் நாம் பேசுவதைக் கேட்கும் திறன் கொண்டவை. அவைகளால் பேச மட்டும் இயலாது ஆனால் நாம் பேசுவதைக் கேட்கும் அதை நிச்சயமாக நாம் பாதுகாக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

சென்னை முழுவதும் தண்ணீர்ப் பிரச்னை வந்தபோதுகூட இங்கு துளியளவு கூட தண்ணீர்ப் பஞ்சம் வரவில்லை என்றும் மிகவும் சுத்தமான தண்ணீரை அருகில் உள்ளவர்களிடம் பகிர்ந்து உதவினோம் என ஜஸ்வந்த் தெரிவித்தார். தன்னுடைய இந்தச் செயலுக்கு அவரின் குடும்பம் உறுதுணையாக இருப்பதாகவும் ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பட்டா இல்லாமல் நுழைந்த இயற்கை நண்பர்கள்

Intro:Body:ஏறி ஆக்கிரமிப்பு, பல அடுக்கில் அடுக்குமாடி கட்டிடம் என சென்னை முழுவதும் ஆதிக்கம் செலுத்த, சென்னை முகப்பேரில் தனது வீட்டில் 10 ,000 சதுர அடியில் மரம், செடிகள் என பசுமை நிறைந்து தன் வீட்டை 35 வருடகாலமாக பராமரித்து வருகிறார் ஜஷ்வந்த் சிங் என்பவர்.

சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறவர் ஜஷ்வந்த் சிங். இவர் தனது வீட்டில் 350 க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து வருகிறார். இதில் 10 க்கும் அதிகமான அரியவகை செடிகளையும் பராமரித்து வருகிறார். செம்மரம், கற்பூரம், திருஓடு, இனிப்பு துளசி போன்ற அறிய வகை செடிகளையும் பராமரித்து வருகின்றார். இங்கு உள்ள ஒவ்வரு செடிகளும் ஓர் மருத்துவ குணம் கொண்டவை என கூறிகிறார் ஜஸ்வந்த் சிங்.

மருத்துவ குணம் கொண்ட செடிகள் தவிர காய்கறி, பழ செடிகளையும் தனது மாடி தோட்டத்தில் பரமரத்தி வருகிறார். மேலும் உயிர்வாயு தயாரிப்பு, சூரியமின் சக்தி, மர வீடு என தன் வேட்டை முழுவதும் இயற்கை வழியில் நிறுவி அதன் மூலம் பயன் அடைந்த்து வருகிறார். இதில் இன்னும் வியப்பான விஷயம் என்னவென்றால் தன் தோட்டத்தில் இருந்து வரும் எந்த கழிவுகளையும் இவர் வெளியில் போடுவதில்லை. அணைத்து கழிவுகளையும் எதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக மாற்றி பயன்படுத்துகிறார். இதற்காக சென்னை மாநகராட்சி ஜஸ்வந்த் சிங்கிற்கு விருதும் வழங்கியுள்ளது.

இதை பற்றி பசுமை இல்லத்தை பராமரித்து வரும் ஜஸ்வந்த் சிங் பேசுகையில், மரம், செடிகள் இல்லாமல் நாம் இல்லை. இதை நாம் சரியாக பராமரிக்கவில்லை என்றல் நமக்கு பின்னர் வரும் சங்கதியினரை நாம் ஏமாற்றுவதற்கு சமம் என தெரிவித்தார். மேலும் மரம், செடிகள் அனைத்தும் நாம் பேசுவதை கேட்கும் திறன் கொண்டவை. அவைகளால் பேசாமட்டும் இயலாது ஆனால் நாம் பேசுவதை கேட்கும். அதை நிச்சயமாக நாம் பாதுகாக்கவேண்டும் என தெரிவித்தார்.

தோட்டத்தை பராமரிப்பதில் இருக்கும் சவால்கள் பற்றி பேசுகையில், சென்னை முழுவதும் தண்ணீர் பிரச்சனை வந்த பொது கூட இங்கு துளியளவு கூட வரவில்லை என தெரிவித்தார். மிகவும் சுத்தமான தண்ணீரை அருகில் உள்ளவர்களிடம் பகிர்ந்து உதவினோம் என தெரிவித்தார். மேலும் இதனால் அருகில் வாசிப்பார்களா எந்த பிரச்சனைகளும் வரவில்லை. நாம் நல்லது செய்வதால் இதை யாரும் எதிர்க்கவில்லை எனவும் கூறினார். மேலும் என் குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். Conclusion:
Last Updated : Oct 25, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.