ETV Bharat / state

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கோபுரத்தில் தீ விபத்து..காரணம் என்ன?

Mylapore Sai Baba Temple Fire Accident: சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் கோபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட தென்னை ஓலைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Mylapore Sai Baba Temple Fire Accident
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கோபுரத்தில் தீ விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 10:32 PM IST

Updated : Nov 12, 2023, 11:10 PM IST

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கோபுரத்தில் தீ விபத்து

சென்னை: மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் கோபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட தென்னை ஓலைகளில் பட்டாசு வெடித்த நெருப்பு விழுந்ததே திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மக்கள் காலையில் எழுந்து புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். மாலை நேரத்தில் அனைவரும் ராக்கெட், வாணவேடிக்கை என இரவு நேரத்தில் வானத்தில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் தான் வெடிப்பர்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, பட்டாசு ஒன்று சாய்பாபா கோயிலின் கோபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தென்னை ஓலை மறைப்பின் மீது விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓலையில் தீப்பிடித்து மளமளவென பரவத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கோபுரத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து, சுமார் 20 நிமிடம் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. மேலும், மாலை நேரத்தில் அப்பகுதியினர் வெடித்த பட்டாசுகளால் இவ்விபத்து நடைபெற்று இருக்கும் என தீயணைப்புத்துறையிர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

தீபாவளி நாள் என்பதால் கோயிலிற்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. 42வது ஆண்டாக தீபாவளியைக் கொண்டாடும் கூட்டுக்குடும்பம்!

Last Updated : Nov 12, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.