ETV Bharat / state

இரண்டாவது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த நபர் போலீசில் சரண்! - Chennai district News

சென்னை: இரண்டாவது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்துவிட்டு, நபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Murder issue
Chennai Murder issue
author img

By

Published : Jul 22, 2020, 3:23 PM IST

Updated : Jul 22, 2020, 6:44 PM IST

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சார்லஸ் ராஜ்குமார்(31). இவருக்கு 2014ஆம் ஆண்டு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ரமணி(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இரண்டாவதாக அவரை சார்லஸ் திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையே, அதே பகுதியில் வசித்துவரும் சார்லி என்பவருக்கும் மனைவி ரமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டு, சார்லஸ் மனைவி ரமணியைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதனால் ஏற்பட்ட மோதலின் காரணமாக மனைவி ரமணி கோபம் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சிறுவனை மலம் அள்ள வைத்த விவகாரம் - நில உரிமையாளர் ராஜசேகர் கைது!

இதையடுத்து, நேற்று (ஜூலை 21) மாலை சார்லஸ், ரமணியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்து ரமணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், சார்லஸ் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சார்லஸ் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

Last Updated : Jul 22, 2020, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.