சென்னை மாநகராட்சி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி இயங்கி வரும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மாணவர்கள் நகலகத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
அப்போது, இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், இந்த கடை தொடங்கியது முதல் இன்று வரை அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர். இதை மூடும்படி மாநாகராட்சி சார்பில் நேற்றைய தினம் நோட்டீஸ் வழங்கியிருந்தோம். ஆனால் கடை சார்பாக எந்த முன்னெடுப்பும் எடுக்காத நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பாக சீல் வைத்துள்ளோம் என்றார்.
இதேபோல், சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வரும் பல்வேறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் ஒடிசா மாநகராட்சி!