ETV Bharat / state

மருந்துவப் படிப்பு ஆள்மாறாட்ட விவகாரம்: விளக்கம் கேட்டு கடிதம்! - கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை

சென்னை: கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இரண்டு மாணவர்களின் புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை தேசிய தகுதி முகமைக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

chennai mgr medical university vc
author img

By

Published : Sep 26, 2019, 2:54 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பி.எஸ்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாணவர்களின் புகைப்படத்தில் மாற்றம் உள்ளது என சந்தேகிப்பதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுதான் தெளிவாக விளக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கும் நேரடியாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் விவரங்கள் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும். அதனை நாங்கள் சரிபார்த்த பின்னரே அந்த மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்த விவரங்களைச் சரிபார்த்து அளிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் எந்தவித பிரச்னையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன்

இதில் தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் மட்டுமே முறைகேடாக சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் மட்டுமே புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இதுபோன்ற பிரச்னை எழுந்துள்ளதால் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் ஆவணங்களை சரிபார்க்கலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

சந்தேகத்திற்கான மாணவர்கள் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம், மாணவர்களின் ஆவணங்கள் உண்மை என உறுதியளித்த பின்னரே அவர்களுக்கு மருத்துவக் கல்வியில் பதிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி விவகாரம்
மாணவர் சேர்க்கை குழு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம்
துணைவேந்தர் சுதா சேஷய்யன் தகவல்

Body:சென்னை,

கோயம்புத்தூர் பி எஸ் சி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 2 மாணவர்களின் புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு மருத்துவ கல்வி இயக்குனர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மத்திய சுகாதாரத்துறை தேசிய தகுதி முகமை ஆகியோருக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதா சேஷய்யன், பிஎஸ்சி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 2 மாணவர்களின் புகைப்படத்தில் மாற்றம் உள்ளது என சந்தேகிப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தான் தெளிவாக விளக்கம் வேண்டும்.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கும் நேரடியாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களில் விபரங்கள் மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்திற்கு அளிக்கப்படும். அதனை நாங்கள் சரிபார்த்த பின்னரே அந்த மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக அறிவிக்கப்படுவார்கள். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் முறைகள் குறித்தும் தங்களுக்கு எதுவும் தெரியாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்த விபரங்களை சரிபார்த்து அளிக்கவேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மருத்துவ கல்லூரி சேர்ந்த மாணவர் மட்டுமே முறைகேடாக சேர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் மட்டுமே புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கல்லூரியில் இருந்து தற்போது வரை புகார் வரவில்லை.

இந்தாண்டு இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளதால் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் ஆவணங்களை சரி பார்க்கலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
2017 18 ஆம் ஆண்டில் நடந்த நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிலும் ஏதேனும் தவறு நடந்துள்ளது என்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்வோம். மருத்துவக் கல்வி இயக்குனரகம் கேட்டுக் கொண்டதால் அந்த மாணவர்களின் சான்றிதழையும் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.

சந்தேகத்திற்கான மாணவர்கள் குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் அவர்களின் ஆவணங்கள் உண்மை என உறுதியளித்த பின்னரே அவர்களுக்கு மருத்துவக் கல்வியில் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.