நாடு முழுவதும் அரசுத் துறைகளில் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்காக ஸ்கோச் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையால் இந்த விருதுகள் வழங்கப்படும். சென்னை குடிநீர் வாரியம் 2.0 எனும் முன்பதிவு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குடிநீர் தேவைகளை 24 மணி நேரத்திற்குள் வழங்கிவருகிறது.
அதனால் டிஜிட்டல் இந்தியா பிரிவில் ஸ்கோச் விருது பெறுவதற்காக சென்னை மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த குடிநீர் வாரியம் தரப்பில் ஸ்கோச் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி டயல் ஃபார் வாட்டர் 2.0 வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. அதில் சென்னை குடிநீர் வாரியம் ஸ்கோச் தங்க விருதைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் பிரபு சங்கர், " டயல் ஃபார் வாட்டர் 2.0 மூலம் முன்பதிவு செய்யப்பட்ட முதல் மெட்ரோ வாட்டர் டேங்கர் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக குடிநீர் வாரிய அனைத்து ஊழியர்களுக்கும், ஆதரவளித்த சென்னை குடிமக்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' - குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு!