ETV Bharat / state

அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு! - weather news

சென்னை: அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்; காற்று வீச்சு குறைந்ததால் சென்னையில் மாசுப் புகை போன்று காட்சியளிக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

metrology puviyarasan
author img

By

Published : Nov 8, 2019, 7:24 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சியில் ஏற்பட்டுள்ள வெப்பச் சலனத்தின் காரணத்தால், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாகச் சேலம் மாவட்டம் சங்ககிரியில் 12 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே தொடரும். 'புல் புல்' புயல் அதிதீவிரப் புயலாக உருவாகி, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் காற்று வீச்சு குறைந்ததால் 'மாசு' புகை போன்று காட்சியளிக்கிறது. இன்னும் இரு தினங்களில் இந்த மாசு மாறிவிடும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைத்து மசூதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்படும் - வாக்குறுதி நல்கிய முதலமைச்சர்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.11.19

அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்; காற்று வீச்சு குறைந்ததால் சென்னையில் புகை போன்று காட்சியளிக்கிறது; சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி...

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
தமிழகத்தில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சியில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனத்தின் காரணத்தால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் 12 செமி, புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 8 செமி மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வரண்ட வானிலை தொடரும்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை;

புல் புல் புயல் அதிதீவிர புயலாக உருவாகி மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் காற்று வீச்சு குறைந்தபடியால் மாசு புகை போன்று காட்சியளிக்கிறது. இன்னும் இரு தினங்களில் காற்றின் காரணத்தால் இந்த மாசுபாடு மாறிவிடும் என்றார்..

tn_che_01_metrology_press_meet_by_puviyarasan_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.