தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பட்டால், பொதுமக்கள் தவித்துவருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. சென்னையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைபடுகின்றது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் தினமும் 525 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு அரசு ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 2.5 மில்லியன் லீட்டர் வீதம் நான்கு முறை ரயில் மூலம் சென்னைக்கு 10 மில்லியன் லீட்டர் தண்ணீர் கொண்டு வருகிறது. இருந்தாலும், பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சென்னை குடிநீர் வாரியம்,
-
சென்னை மக்களுக்கு வணக்கம், உங்களது குறைகளை எங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவதற்கு முன் https://t.co/MqmX27oSC5 என்ற தளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், அந்த புகார் ஒருங்கிணைந்த புகார் மையத்திற்கு சென்று உங்கள் குறைகள் துரித முறையில் தீர்வு காணப்படும். நன்றி.
— Chennai Metro Water (@CHN_Metro_Water) July 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சென்னை மக்களுக்கு வணக்கம், உங்களது குறைகளை எங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவதற்கு முன் https://t.co/MqmX27oSC5 என்ற தளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், அந்த புகார் ஒருங்கிணைந்த புகார் மையத்திற்கு சென்று உங்கள் குறைகள் துரித முறையில் தீர்வு காணப்படும். நன்றி.
— Chennai Metro Water (@CHN_Metro_Water) July 19, 2019சென்னை மக்களுக்கு வணக்கம், உங்களது குறைகளை எங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவதற்கு முன் https://t.co/MqmX27oSC5 என்ற தளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், அந்த புகார் ஒருங்கிணைந்த புகார் மையத்திற்கு சென்று உங்கள் குறைகள் துரித முறையில் தீர்வு காணப்படும். நன்றி.
— Chennai Metro Water (@CHN_Metro_Water) July 19, 2019
”சென்னை மக்களுக்கு வணக்கம், உங்களது குறைகளை எங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவதற்கு முன் https://chennaimetrowater.in/login.html என்ற தளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யுங்கள், அந்த புகார் ஒருங்கிணைந்த புகார் மையத்திற்கு சென்று உங்கள் குறைகளுக்கு துரித முறையில் தீர்வு காணப்படும்” என கூறியுள்ளது. சென்னையில் பருவமழை விரைவில் தொடங்கினால் மட்டுமே சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்னை ஓரளவிற்கு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.