சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு மெட்ரோ குடிநீர் வழங்க, மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆர். விஜயகுமாரியை நாடியுள்ளார். அப்போது மனுவை பரிசீலித்து, இணைப்பு வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில், புகார்தாரரிடம் சொன்ன இடத்தில் வைத்து ரூபாய் 50 ஆயிரத்தை பொறியாளர் ஆர். விஜயகுமாரியிடம் வழங்க அலுவலர்கள் கூறியுள்ளனர். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் வந்த பொறியாளர் விஜயகுமாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.