இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை பகுதியில் தங்கள் வீடுகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கூடிய விரைவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாகவோ அல்லது களிமண், மணல், கருங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு தரை மட்டம் வரை மூட வேண்டும்.
இதுகுறித்த தொழில் நுட்ப ஆலோசணை பெற பொதுமக்கள் அருகிலுள்ள சென்னைக் குடிநீர் வாரிய பணிமனை அலுவலகத்திற்கு 044-28454080 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பொது மக்கள் தங்கள் உபயோகத்திற்காக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு பற்றிய விவரங்களை தங்களது பிரிவுக்குட்பட்ட சென்னைக் குடிநீர் வாரிய பணிமனை அலுவலகத்தில் அதற்குறிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை வழங்கலாம்.
இந்த விவரங்களை சமர்ப்பிக்க வருகின்ற 25 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, பொது மக்கள் சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.