தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், மெட்ரோ ரயில்கள் இயக்கும் நேர கட்டுப்படுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (ஆக.23) முதல் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீட்டித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெரிசல்மிகு நேரங்களான காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படவுள்ளது. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும் முகக்கவசம் அணியாமல் அவரும் பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
ஜுன் ஆறாம் தேதி முதல் நேற்று (ஆக.21) வரை மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமாக ரூ. 35,200 வசூலிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜூலையில் 18.46 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம்