ETV Bharat / state

சென்னை மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Apr 1, 2023, 2:27 PM IST

சென்னை மெட்ரோ இரயில்களில் மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாகவும் இது கடந்த மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6.30 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தை விட மார்ச் மாதத்தில் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவையானது சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. சென்னை முழுவதும் மெட்ரோ இரயிலின் முதல்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளை கவரும் வகையிலும் மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாகவே ஒவ்வொரு மாதமும் மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி மட்டுமின்றி நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ள நிலையில் பிப்ரவரி மாதம் மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.அதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் மொத்தம் 69,99,341 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 10ஆம் தேதி 2.58,671 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,61,453 பயணிகள் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி, 44,76,793 பயணிகளும் டோக்கன்களை பயன்படுத்தி 3,55,702 பயணிகளும் மற்றும் குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,393 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் குழந்தையோடு தவித்த வட மாநிலத்தவர்கள்.. உடனடியாக உதவிய ஆட்சியர்.. நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.