சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அண்மையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஃப்யூஷன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் வருகின்ற ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, ஆலந்தூர், கிண்டி, அசோக் பில்லர், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஃப்யூஷன் தமிழிசை கச்சேரி, பறையாட்டம், பரதநாட்டியம், டிரம்ஸ், நாதஸ்வரக் கச்சேரி, குழந்தைகள் உரிமை குறித்த தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். வருகின்ற 21ஆம் தேதி மெட்ரோ ரயிலுக்குள்ளேயே ஃப்யூஷன் தமிழிசை கச்சேரி நடைபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக - அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!