வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வழிநோக்கம், பலமேற்குளம் உள்ளிட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை!