ETV Bharat / state

15 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மழை! - வளிமண்டல சுழற்சி காரணமாக மழை

15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department said 15 districts in tn got rain for the next three hours

author img

By

Published : Apr 12, 2021, 5:35 PM IST

சென்னை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாற்று தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுளளது.

ஏப்ரல் 15ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கன மழையும், பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.