ETV Bharat / state

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : May 17, 2023, 2:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் 19 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம்(100) அடித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 109 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மோக்கா புயல் காரணமாக சென்னை கடல் பகுதியில் குறைந்தளவே காற்று வீசுகிறது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 18ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை இன்றும் (மே 17), நாளையும் (மே 18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2லிருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்புகளாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று (மே 17) மத்திய வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.