ETV Bharat / state

இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - வானிலை அறிக்கை

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department announced Tamil Nadu receive rain today and tomorrow
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
author img

By

Published : Apr 4, 2023, 4:01 PM IST

சென்னை: தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஈரோடு மாவட்டத்தில் ஊள்ள குண்டேரிபள்ளத்தில் 10 சென்டிமீட்டர் என மழைப் பதிவாகியுள்ளது. பிறகு கோபிசெட்டிபாளையம், பில்லிமலை எஸ்டேட்டில் (நீலகிரி) தலா 9 சென்டிமீட்டரும், ஆயிக்குடி (தென்காசி) 7 சென்டிமீட்டரும், குன்னூர் (நீலகிரி), சோத்துப்பாறை (தேனி), போடிநாயக்கனூர் (தேனி), செங்கோட்டையில் (தென்காசி) தலா 5 சென்டிமீட்டரும் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் கே.ஸ்ரீகாந்த் கூறுகையில், ''2023 கோடை சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழ்நாட்டில் எந்த இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) ஆய்வகமும் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை. ஈரோட்டில் உள்ள ஆய்வகத்தில் மட்டும் 39.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தது’’ எனத் தெரிவித்த அவர், ''ஏறக்குறைய தமிழகம் முழுவதும் ஏப்ரல் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், சென்னை உட்பட வட தமிழகம், ராயலசீமாவின் வெப்பத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் வெப்பநிலை 3 அல்லது 4 டிகிரி அதிகரிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெயில் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் முழு ஆண்டுத் தேர்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.