ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - Chennai meteorological department

சென்னை: நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai meteorological department about rain falls

author img

By

Published : Sep 13, 2020, 4:47 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேல் அடக்கு சுழற்சியானது தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு -வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும். இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை செப்டம்பர் 13 முதல் 17ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் ஒட்டியுள்ள கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோன்று செப்டம்பர் 13 முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.