ETV Bharat / state

வானிலை மைய விமர்சனங்கள்: இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது - சென்னை வானிலை மையம் - Chennai Meteorological Centre

Chennai Meteorological Centre: இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களைப் புண்படுத்துகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மைய விமர்சனங்கள்;இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது- சென்னை வானிலை மையம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 10:52 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை தாமதமாகக் கிடைக்கின்றது போன்ற விமர்சனங்கள் வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாகவும், நமது இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாகத் தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை.

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையைக் கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தைக் கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும்.

இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள். உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளை உலகத் தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாகப் பெருமளவு உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்குப் பதிலாக, சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்துச் செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாகவும், நமது இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது ”என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.