சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 16) நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியயுள்ள தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய நிலவரம்
நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18ஆம் தேதி நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும்; ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த இரு தினங்கள்
அடுத்த இரு தினங்கள் (19,20) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்க கடல் பகுதிகள்: ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூலை 20 ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
ஜூலை 16 முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை தலைமை செயலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!