இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “ஊரடங்கு காலகட்டம் முடிவடைந்த பின்னர் உரிய காலகட்டத்தில் பாடங்களை முடித்து முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்திட வேண்டும். அதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கி அதில் மாணவர்களுக்கு எழும் பாடரீதியான சந்தேகங்களை தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை அனுப்பிட வேண்டும் என்றும் ஸ்கைப், கூகுள் ஹேங்க் அவுட் போன்ற ஆன்லைன் தொழில்நுட்பங்கள் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் பணியில் பேராசியர்கள் ஈடுபட வேண்டும் எனவும் துணை வேந்தர் துரைசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தடையை மீறுபவர்களுக்கு ராமதாஸ் ட்விட்டரில் வேண்டுகோள்