ETV Bharat / state

'லிப்ட் கொடுத்து' பணத்தை அபேஸ் செய்த பலே திருடன் !

author img

By

Published : Jan 24, 2020, 8:39 PM IST

Updated : Jan 25, 2020, 7:36 AM IST

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் முதியவரை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று பைக்கில் ஏற்றி அடையாளம் தெரியாத நபர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடன்
திருடன்

சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவை சேர்ந்தவர் சதாசிவம்(95). இவர் மீன்வளத் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். பின்னர், வங்கியிலிருந்து வெளியே நடந்த வந்த மூதியவரை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பேச்சுக்கொடுத்து உங்கள் வீட்டு வழியாகத்தான் செல்கிறேன் வாருங்கள் இறக்கிவிடுகிறேன் என்று பைக்கில் ஏற்றியுள்ளார்.

அவரை நம்பி பைக்கில் முதியவர் ஏறியதும் பையை கொடுங்கள் முன்னாடி மாட்டிவைத்துக் கொள்கிறேன் என்று வாங்கி மாட்டியுள்ளார். அதன்பின்னர், முதியவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு பையை கொடுத்துள்ளார்.

மூதியவரின் பணத்தை தூக்கிய ஹெல்மெட் திருடன்

இதை தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற முதியவர் பையில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வங்கியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சுகாதாரத் துறை திடீர் ஆய்வு - பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!

Intro:Body:ஓய்வு பெற்ற மீன்வளத்துறை அதிகாரியின் கவனத்தை திசை திருப்பி 20ஆயிரம் ரூபாய் கொள்ளை....

சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவை சேர்ந்த சதாசிவம் வயது (95)மீன்வளத் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சதாசிவம் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது பழமுதிர்சோலை அருகே இருசக்கர வாகனத்தில் நின்று இருந்த 50வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பேச்சு கொடுத்து உங்கள் வீட்டு வழியாகத்தான் செல்கிறேன் வண்டியில் ஏறுங்கள் என்று கூறியுள்ளார்...

நம்பி ஏறியதோடு பையை கொடுங்கள் முன்னாடி மாற்றிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அமரச்சொல்லினார். வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு பையை கொடுத்துள்ளார் வீட்டினுள் சென்ற சதாசிவம் பையை பார்த்தபோது பையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை என்று டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்...

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய டி.பி.சத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...Conclusion:
Last Updated : Jan 25, 2020, 7:36 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.