சென்னை பட்டினம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வரக்கூடிய, சுமார் 10 வயதுமிக்க 5 சிறுமிகள் நேற்று பிற்பகல் ஓடிபிடித்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் கையில் நிறைய கைக்குட்டைகளுடன் குழந்தைகளிடம் வந்து, "ஓடிபிடித்து விளையாடாமல் கைகுட்டையால் கண்ணை கட்டிகொண்டு மறைந்து விளையாடும் திருடன் போலீஸ் விளையாடுங்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது சந்தேகமடைந்த சிறுமி ஒருவர், வீட்டிலிருந்த பாட்டியிடம் சொல்லி அழைத்து வந்துள்ளார். அதனைக் கண்ட இருவரும், ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பட்டினம்பாக்கம் காவல் துறையினர், அந்த நபர்கள் வந்த ஆட்டோ எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 220 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற இரண்டு பேர் கைது!