சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கணவரைப் பிரிந்து தனது மூன்று மகள்களுடன் சென்னை ராயப்பேட்டையில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், அவருக்கு சமையல் கலைஞர் உதயனுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாளுடன் தங்கியிருந்த உதயன் கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய மூன்று மகள்களிடமும் தவறாக நடக்க முயன்றதால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதயன், பாண்டியம்மாளையும் அவரது மூன்று மகள்களையும் கொலை செய்துள்ளார். நால்வரும் உயிரிழந்த பின்னர், பாண்டியம்மாளின் மூன்று மகள்களின் சடலங்களுடனும் உதயன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் கொலை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் எனும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உதயன் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த இவ்வழக்கிற்கான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட உதயனுக்கு நான்கு ஆயுள் தண்டனையும், இருபது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.