கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது தந்தை தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தார். மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவிலிருந்து வந்து சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள், ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை குறித்து நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஐஐடி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து ஐஐடி இயக்குநரிடம் மனுவும் அளித்துள்ளனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்!