ETV Bharat / state

கிராமங்களில் விர்ச்சுவல் கல்வி: சென்னை ஐஐடியின் முன்னெடுப்பு!

கிராமப்புற மாணவர்களுக்கு விர்ச்சுவல் முறையில் சமூக அறிவியல் வரலாறு அறிவியல் பாடங்களை கற்பிக்க சென்னை ஐஐடி புதிய முயற்சி எடுத்துள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு விர்ச்சுவல் முறை கல்வி பாடங்கள்

author img

By

Published : Apr 12, 2023, 5:50 PM IST

சென்னை: இன்றைய காலக்கட்டங்களில் டிஜிட்டலின் பன்முகத்தன்மை கணிசமாக எல்லாத் துறைகளிலும் பரந்து கிடக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு விடியலையும் புதுப்புது கண்டுபிடிப்புகளுடன் மக்கள் வாழ பழகுகின்றனர். அந்த வகையில் மனிதனின் அற்புத கண்டுபிடிப்புகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் ஒன்றாகும்.

மேலும் இதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் மனித இயல்புகளை எளிதாக்கவும் ஒரு புதிய கண்டுபிடிப்புடன் முன்வந்துள்ளனர் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். கிராமப் புறங்களில் உள்ள பள்ளி மாணவர்ககளுக்கு பயன்படும் வகையில் ஏஆர் மற்றும் விஆர் (ஆக்மெண்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி) அடிப்படையிலான கற்றலை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் மாதிரிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறும் வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை உருவாக்குவதாகும். ஆக்மெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகை உருவாக்குதல் டிஜிட்டல் முறையிலான கதை சொல்லுதல் விளையாட்டுகள் ஆகியவற்றால் கற்றல் செயல்முறை மேலும் வலுப்பெறும். அத்துடன் மாணவர்கள் உயர்கல்வி என்ற போட்டி மிகுந்த களத்திற்கு தங்களை தயார் செய்துக் கொள்ள உதவியாகவும் இருக்கும் எனற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான மெரின் சிமி ராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோர் ஆக்மெண்டட் ரியாலிட்டி அடிப்படையில் 'மெமரிபைட்ஸ் (MemoryBytes) எனப்படும் முதல் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர். 500 ஆண்டுகளில் நாடு கடந்தது வந்த ஆங்கிலோ- இந்திய சமூகத்தின் வரலாற்றை இது படம்பிடிக்கும். ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகிய பதிப்புகளில் பயன்படுத்தக் கூடிய இந்த மொபைல் செயலி புகைப்படங்கள், வரைபடங்கள், காப்பக ஆவணங்களின் அனிமேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை அளிக்கிறது.

கையடக்க கருவிகளின் மூலம் மெய்நிகர் அணுகல் மற்றும் இயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் இத்திட்டம் கல்விப் புரட்சிக்கு வழிகோலும். அத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே இருந்துவரும் டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் பாலமாகவும் அமையும். அணுகக் கூடிய குறைந்த செலவிலான அதிவேகக் கற்றல் அனுபவங்களை டிஜிட்டல் முறையிலான இக்கல்வி வழங்குவதுடன் பல்வேறு துறைகளில் பணிபுரியும் நிபுணர்களை இணைக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இயற்பியல் வகுப்பறைகளில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் ஏஆர்,விஆர் அடிப்படையிலான கற்பித்தல்- கற்றல் மாதிரிகளை உருவாக்க இத்திட்டம் முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேனி சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்.. சீறிப்பாய்ந்த மாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.