ETV Bharat / state

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட தடை - தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட தடை

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

South Indian film chamber of commerce  South Indian film chamber of commerce meeting restrain  Chennai High Court  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழு  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட தடை  சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Mar 2, 2022, 1:42 PM IST

சென்னை: கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான தேர்தல், உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், அதற்கு உரிய கால அவகாசம் அளிக்காமல் அவசர, அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலை முறையாக நடத்தாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறப்படும் உறுப்பினர்களை வைத்து பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவுவை நடத்த தடை விதிக்க வேண்டுமென தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான கிஷோர்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்று (மார்ச் 02) தீர்ப்பளித்தார். அதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 77ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சிகள் பத்திரிகையில் பரப்புரை விளம்பரங்கள் செய்ய தடை கிடையாது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.