ETV Bharat / state

"மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியை பொறியியல் கல்லூரி செய்து கொடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் - தனியார் பொறியியல் கல்லூரி

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய்வுதள பாதை, கழிப்பிட வசதிகளை 3 மாதத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், மாணவர்கள் சேர்க்கை நடத்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chennai high court
author img

By

Published : Jun 25, 2019, 8:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்த மனுவில், 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது பொறியியல் பட்ட படிப்புகளை நடத்தி வருகிறது. இக்கல்லூரியை நடப்பாண்டு மாணவர் சேர்க்கை பட்டியலில் இருந்து நிறுத்தி வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கல்லூரி கட்டடத்தில் மின்தூக்கி வசதி கிடையாது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்தும் சாய்வுதள மேடை முறையாக அமைக்கப்பட வில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் இல்லை. இந்த குறைபாடுகள் அனைத்தும் ஏஐசிடிஇ-யின் திடீர் சோதனையின் போது தெரிய வந்ததாகக் கூறியுள்ளது.

இந்த குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யக் கூடிய ஒன்றாகும். ஆனால், இதற்கு கால அவகாசம் கொடுக்காமல், கல்லூரியின் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாக அதில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. இதில் வாதங்களை கேட்ட நீதிபதி, கல்லூரியின் உத்திரவாதத்தின் அடிப்படையில், ஏ.ஐ.டி.சி.இ. சுட்டிக்காட்டிய குறைகளை 3 மாதத்தில் நிவர்த்தி செய்திட வேண்டும். இல்லையேல், கல்லூரி நிர்வாகத்தின் மீது கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம்.

இக்கல்லூரியை பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையானது, ஏ.ஐ.சி.டி.இயின் நடவடிக்கைக்கு உட்பட்டது. இந்த விபரத்தை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய்வுதள பாதை மற்றும் கழிப்பிட வசதிகளை 3 மாதத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொடுக்காத பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி உள்ள ஜெயமாதா பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது பொறியியல் பட்ட படிப்புகளை நடத்தி வருகிறது.

இக்கல்லூரியை நடப்பாண்டு மாணவர் சேர்க்கை பட்டியலில் இருந்து நிறுத்தி வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கல்லூரி கட்டிடத்தில் மின்தூக்கி வசதி கிடையாது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்தும் சாய்வுதள மேடை முறையாக அமைக்கப்பட வில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் இல்லை. இந்த குறைபாடுகள் அனைத்தும் ஏஐசிடிஇ-யின் திடீர் சோதனையின் போது தெரிய வந்ததாக கூறியுள்ளது.

இந்த குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யக் கூடிய ஒன்றாகும். ஆனால், இதற்கு கால அவகாசம் கொடுக்காமல், கல்லூரியின் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், ஏ.ஐ.சி.டி.இ. விதிகள் படி, இந்த குறைபாடுகளை 3 மாதத்த்தில் நிவர்த்தி செய்திட கல்லூரி நிர்வாகம் உத்திரவாதம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

அப்போது ஏ.ஐ.சி.டி.இ. சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ரபு மனோகர், குறைகளை கல்லூரி நிர்வாகம் நிவர்த்தி செய்தால், மாணவர் சேர்க்கை நிறுத்தப் பட்டியலில் இருந்து கல்லூரி நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, கல்லூரியின் உத்திரவாதத்தின் அடிப்படையில், ஏ.ஐ.டி.சி.இ. சுட்டிக்காட்டிய குறைகளை 3 மாதத்தில் நிவர்த்தி செய்திட வேண்டும். இல்லையேல், கல்லூரி நிர்வாகத்தின் மீது கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம்.

இக்கல்லூரியை பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையானது, ஏ.ஐ.சி.டி.இயின் நடவடிக்கைக்கு உட்பட்டது. இந்த விசயத்தை, கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.