ETV Bharat / state

உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் எம்.எம். சுந்தரேஷ் - supreme court new judges

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.எம்.சுந்தரேஷ்
எம்.எம்.சுந்தரேஷ்
author img

By

Published : Aug 27, 2021, 2:27 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிவரும் எம்.எம். சுந்தரேஷ் (59) உள்ளிட்ட ஒன்பது பேரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைசெய்திருந்தது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நீதிபதி எம்.எம். சுந்தரேஷை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1962ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர் எம்.எம். சுந்தரேஷ். அவரது தந்தை முத்துசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த எம்.எம். சுந்தரேஷ், கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தார். சென்னையில் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து, வழக்கறிஞராகக் கடந்த 1985ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார்.

mm  sundresh
எம்.எம். சுந்தரேஷ்

பின்னர், தனது வாதத்திறமையால் அரசு வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பல ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு முக்கியத் தீர்ப்புகள் வழங்கிய மூத்த நீதிபதியான எம்.எம். சுந்தரேஷ், தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2027ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடிப்பார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 27) மதியம் 3.30 மணியளவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி முன்னிலையில் நடைபெறுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு வன்புணர்வு ஆகாது - சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.