ETV Bharat / state

சொகுசு கார் நுழைவு வரி வழக்குகள்: நீதிபதி சரமாரி கேள்வி!

author img

By

Published : Aug 12, 2021, 7:18 AM IST

Updated : Aug 12, 2021, 9:24 AM IST

வரி வசூலிக்காத அலுவலர்களுக்கு நான்கு நாள்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

luxury cars entry tax cases
luxury cars entry tax cases

சென்னை: நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரைப் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வணிக வரித்துறை அலுவலர் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, ”வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண் அலுவலர், ஆலந்தூர் உதவி ஆணையர் அதிகாரத்துக்கு உட்பட்டதில் இரண்டு வழக்குகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்தார்.

விஜய், தனுஷ்
விஜய், தனுஷ்

நீதிபதியின் சரமாரி கேள்விகள்

இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி, “பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கிக் கொண்டு நுழைவு வரியை செலுத்தாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டபோதும், வரியை வசூலிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு நிதி அமைச்சர்கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அலுவலர்கள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டதன்படி, எத்தனை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? வணிக வரித்துறை அலுவலர்களின் அலட்சியத்தால் அரசுக்கு காலதாமதமாக வருவாய் வருகிறது.

காலதாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஆனால் அலுவலர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அலுவலர்களுக்கு நான்கு நாள்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அலுவலர்கள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது.

சொகுசு கார்கள்
சொகுசு கார்கள்

வரி வசூலிக்காத அலுவலர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ”வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களையும் வணிக வரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்த அனைத்து வழக்குகளுக்கும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்10

Last Updated : Aug 12, 2021, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.