தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை சார்பில் திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் மூலதன செலவில் 'திருக்கோவில்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலைய துறை பொதுநல நிதியை, தொலைக்காட்சி தொடங்க பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் மாதம் விசாரித்தது.
திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்
சென்னை: திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு, இந்து சமய அறநிலைய துறை பொது நல நிதியை பயன்படுத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.