ETV Bharat / state

நடிகை சித்ரா மரண வழக்கு: ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்... - ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகை சித்ரா மரணத்தில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்துக்செய்யக்கோரி, ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatchennai high court  vj chitra death case  case filed by hemnath in vj chitra death case  hemnath petition dismissed by high court  high court dismissed hemnath petition  hemnath petition  நடிகை சித்திரா மரண வழக்கு  ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
Etv Bharatநடிகை சித்திரா மரண வழக்கு
author img

By

Published : Aug 3, 2022, 7:40 AM IST

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தன்னுடைய மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை ஹேம்நாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது மரணம் தற்கொலை தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, அந்த அடிப்படையில் எந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது, தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அன்புச்செழியனின் சகோதரர் வீட்டில் நவீன லேசர் லாக்கர் - காத்திருந்த அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.